அகஸ்தியர் அருவியில் மதுரை வியாபாரி கொலை!
விகேபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மதுரை வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். சுற்றுலா வந்த இடத்தில் இந்த பயங்கரம் நிழந்துள்ளது. இதையொட்டி அம்பையை சேர்ந்த 3 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை ஆனையூரை சேர்ந்த சேதுராமன் மகன் சசிகுமார் பிளாஸ்டிக் வாங்கி விற்கும் மொத்த வியாபாரி. இவர் கடந்த மாதம் 30ம் தேதி தனது நண்பர்கள் 4 பேருடன் பாபநாசம் வந்தார். அங்கு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அன்று காலை அவர்கள் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளித்தனர். அப்போது அம்பையை சேர்ந்த சில இளைஞர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அருவியில் தண்ணீரை வாரி இறைத்து விளையாடியபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அப்போது அம்பையை சேர்ந்த ஒருவரை சசிகுமார் தாக்கினார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சில மணி நேரம் கழித்து சசிகுமார் அவர் தங்கி இருக்கும் லாட்ஜ் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது அம்பையை சேர்ந்த 3 பேர் வந்தனர். அவர்கள் சசிகுமாரிடம் தகராறு செய்து மதுபாட்டில் மற்றும் கம்பால் தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் சுயநினைவின்றி கீழே சாய்ந்தார்.
அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தபி்ன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தி அம்பையை சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications