மூன்றாக பிரிக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிக்கு இன்று தேர்தல்-கைப்பற்றப் போவது யார்?
டெல்லி: டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுகிறது.
தலைநகர் டெல்லி மாநகராட்சியை முதல்வர் ஷீலா தீட்சித் மூன்றாக பிரித்து விட்டார். நிர்வாக வசதிக்காக இந்தப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி மாநகராட்சியானது டெல்லி கிழக்கு, டெல்லி தெற்கு, டெல்லி வடக்கு என்று 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிரிக்கப்பட்ட டெல்லி மாநகராட்சிகளுக்கு இன்று காலை தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா ஜனதா கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 2,400 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். மொத்தம் 11,543 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 30 ஆயிரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
3 மாநகராட்சிகளிலும் ஒரு கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 42.95 லட்சம் பேரும் பெண்கள் 42.67 லட்சம் பேரும் உள்ளனர்.
2007-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தற்போதைய தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில்தான் முதல் முறையாக பெண்களுக்கு 50 விழுக்காடு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications