மதுரை வந்த ஸ்டாலினுக்கு சோதனை மேல் சோதனை..!
மதுரை: மதுரையில் முகாமிட்டு கட்சிக் கூட்டங்களை நடத்தி வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சோதனை மேல் சோதனையை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்.
அண்ணனால் அப்செட்
திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் மதுரை பி.டி.ஆர். மஹாலில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆனால் மதுரை மாநகர திமுக பொறுப்பாளர்கள் எவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
சென்னையில் தங்கியிருக்கும் மு.க. அழகிரியின் உத்தரவின்பேரிலேயே அவரது ஆதரவாளர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அழகிரியின் உத்தரவால்தான் திமுக பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கேள்விப்பட்ட ஸ்டாலின் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் நேர்காணலை மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடத்திவிட்டு அழகிரி ஆதரவாளரான ஏர்போர்ட் பாண்டியன் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். இதிலும் கூட அழகிரி கலந்துகொள்ளவில்லை.
அரசால் சலசலப்பு
மதுரையில் திமுக இளைஞரணி நேர்காணல் கூட்டம் நடைபெற்ற பி.டி.ஆர். மஹாலுக்கு எதிரே தமிழ் ஜெயா திரையரங்கம் உள்ளது.
இதில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒருகல் ஒரு கண்ணாடி படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திடீரென திரையரங்கில் உள்ளே நுழைந்த போலீசார் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி ரெய்டு நடத்தினர். மேலும் ஒன்றரை லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தும் திரையரங்கு பணியாளர்கள் 7 பேரை கைது செய்தும் சென்றதால் ஸ்டாலின் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.
என்னத்த சொல்ல.. என்ற நிலையில் மதுரையில் மு.க.ஸ்டாலினின் முகாம் புலம்பிக் கிடக்கிறது..
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications