புதுக்கோட்டை: 'அம்மா'வை நேரில் பார்த்து ஆதரவு கேட்க தா.பாண்டியன் முடிவு?

இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகிய இருவர் மட்டும் நேரில் போய் ஜெயலலிதாவைப் பார்க்கவுள்ளனராம். இதற்காக டைம் கேட்டு அவர்கள் கடிதம் கொடுத்துள்ளனராம். அனுமதி கிடைத்தவுடன் ஜெயலலிதாவை சந்தித்து புதுக்கோட்டையி்ல் தாங்கள் போட்டியிட ஆதரவு அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுக்குமாம்.
எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை சிபிஐ தலைவர்களும் கூட அதிமுகவின் ஆதரவைப் பெற சம்மதம் தெரிவித்துள்ளனராம். இதன் மூலம் இத்தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளனராம்.
கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது சிபிஐ. அக்கட்சி புதுக்கோட்டை தொகுதியை முதலில் கேட்கவே இல்லை. ஆனால் அதிமுகதான் வலியக்க இந்தத் தொகுதியை சிபிஐக்கு தள்ளி விட்டது. இதனால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமலேயே முத்துக்குமரனை இறக்கியது சிபிஐ. ஆனால் அனைவரும் அதிசயிக்கும்படி மிக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட முத்துக்குமரன் பிரசாரத்தின்போதே அத்தனை பேரையும் கவர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தொகுதியில் முத்துக்குமரன் ம்றைவைத் தொடர்ந்து இடைத் தேர்தல் வரவுள்ளது. இதில் தானே போட்டியிடப் போவதாக அதிமுக அறிவித்து பல்வேறு களப் பணிகளையும் தொடங்கி விட்டது. இதனால் சிபிஐ பீதியடைந்துள்ளது. இதையடுத்தே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோர அக்கட்சி தீர்மானித்துள்ளது.
'அம்மா' அருள்வாரா, புதுக்கோட்டையை தருவாரா?.. பொறுத்திருந்து பார்க்கலாம்.!
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications