ஜெ.வுடன் நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இன்று காலை உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு தொடங்கியது. இதில் ஜெயலலிதா பங்கேற்றார்.
இதையடுத்து இன்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க தமிழ்நாடு இல்லத்திற்கு மோடி, பட்நாயக் வந்தனர். அங்கு மூன்று பேரும் ஜெயலலிதாவுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் வெளியில் வந்த நவீன் பட்நாயக் கூறுகையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்த முதல்வர்கள் மாநாட்டின்போது மத்திய அரசுக்கு எதிராக அணி திரளுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
முன்னதாக பஞ்சாப் துணை முதல்வர் எஸ்.எஸ்.பாதலும் வருவதாக இருந்தது. ஆனால் அவர் கடைசி நேரத்தில் வரவில்லை.












Click it and Unblock the Notifications