ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட தமிழக காங். எம்.பிக்களுக்குத் தயக்கமாம்!

Subscribe to Oneindia Tamil

Rajapakse
டெல்லி: இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள், ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனராம்.

இலங்கைக்கு இன்று இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இக்குழுவில் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர் உள்ளிட்ட நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர்.

இன்று இந்தியக் குழுவினரிடம் இலங்கை பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அளிக்கப்பட்டது. அப்போது 21ம் தேதி ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிடும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது குறித்து தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் ஆட்சேபனை தெரிவித்தனராம்.

இதை ரத்து செய்யுமாறும், அதற்குப் பதில் 20ம் தேதி மாலை ராஜபக்சேவை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கோரியுள்ளனராம்.

இருந்தாலும் மத்திய அரசு இதை ஏற்குமா என்பது தெரியவில்லை. விருந்து சாப்பிடுவதை ரத்து செய்தால் ராஜபக்சே கோபித்துக் கொள்ளலாம் என்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+