திவாகரனுக்கு 3வது வழக்கில் ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொலை மிரட்டல் வழக்கில் சசிகலா தம்பி திவாகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ரிஷியூரில் சோம தமிழார்வன் என்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தற்போது திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நீடாமங்கலம் காவல்நிலையத்தில் திவாகரன் தினமும் கையெழுத்திட நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
3 வழக்கில் ஜாமீன்
திவாகரன் மீது மொத்தம் 5 வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கெனவே திவாகரனுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருந்தது. தற்போது ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார்.
இன்னமும் 2 வழக்குகளில் ஜாமீன் பெறவேண்டும். இதில் நீடாமங்கலம் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் திவாகரன் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications