விஜயகாந்த் ரூமை காங்.குக்கு பங்கு போட்டுக் கொடுத்ததற்கு தேமுதிக எதிர்ப்பு

சட்டசபை காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தனியாக அறை கொடுக்காமல் இருந்தார்கள். நேற்றுதான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறை ஒதுக்கிக் கொடுத்தது சட்டசபை செயலகம். ஆனால் அந்த அறையை தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஒதுக்கிய அறையிலிருந்து ஒரு பகுதியை பிரித்து கொடுத்துள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது தேமுதிகவினரை கொந்தளிக்க வைத்து விட்டது.
சட்டசபையில் இன்று இந்தப் பிரச்சினையை தேமுதிகவினர் எழுப்ப முயன்றனர். ஆனால் அதை சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இறுதியில், தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து வெளியேறினர்.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தங்களது தலைவருக்கு ஒதுக்கப்பட்ட அறையின் அளவை மாற்றி, எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தை அரசு அவமதித்து விட்டதாக தேமுதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications