சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெ-சசி புதிய மனு தாக்கல்

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்க பல்வேறு முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. (சசிகலாவிடம் விசாரணை ஆரம்பித்த சமயத்தில் தான் அவரை ஜெயலலிதா பிரிந்தது, சொந்தங்கள் கைது, பின்னர் சசி மட்டும் மீண்டும் போயஸ் கார்டன் வந்தது என 'மெகா தொடர் நாடகம்' நடந்தது). இதுவரை சசிகலாவிடம் 504 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. அவர் மிக சாவகாசமாக பதில் சொல்லி வருவதால், பதில்கள் பதிவு செய்வதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று கோரி சசிகலா சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அது நிராகரிக்கப்படவே, அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அங்கும் சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.
இந் நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது ஜெயலலிதா, சசிகலா சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்களை படித்துப் பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதுவும் வழக்கை இழுத்தடிக்கும் இன்னொரு முயற்சி என அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications