2,12,000 கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அமைச்சர் பழனியப்பன் அறிவிப்பு
சென்னை: 2012-2013ம் கல்வி ஆண்டில் 2 லட்சத்து 12,000 கல்லூரி மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் (லேப்-டாப்) வழங்கும் திட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 34 ஆயிரம் லேப்-டாப் இந்த மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்.
2012-13ம் ஆண்டில் 2 லட்சத்து 12,000 மடிக்கணினிகள் மீதமுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு அறிவியல் கண்காட்சி, பொது விரிவுரைகள், குழு விவாதம், அறிவியல் செயல் முறைகள், அறிவியல் போட்டிகள் இவற்றை உள்ளடக்கிய சென்னை அறிவியல் விழா ரூ.15 லட்சம் செலவில் நடத்தப்படும்.
மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு சென்னை பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளி தொழில் நுட்ப கண்காட்சி கூடம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருது இந்த ஆண்டு 10 அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications