திருப்பதியில் குவியும் பக்தர்கள்: நேற்று ஒரேநாளில் 50,000 பேர் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்பொழுதுமே பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று புதன்கிழமை என்பதால் பக்தர்கள் கருவறை அருகே நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 50,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அலை மோதுவதால் இலவச தரிசனத்திற்கு 26 மணிநேரமும், ரூ.300 கட்டண தரிசனத்திற்கு 7 மணிநேரமும், பாதயாத்திரையாக வருபவர்களுக்கு 4 மணிநேரமும் ஆகிறது. மொட்டை போடும் இடத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோடை விடுமுறை காலத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக கீழ் திருப்பதியில் இருந்து கோவிலுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications