கஞ்சா கடத்தியதாக பொய்வழக்கு: இலங்கை சிறையில் வாடும் 5 தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு "கஞ்சா" கடத்தியதாக போடப்பட்ட பொய்வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 28ம் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்கள் மீது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம், தமிழக அரசின் சார்பில் அந்த 5 பேருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்கவேண்டியிருப்பதாகக் கூறிய நீதிபதி வரும் 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். வரும் 23ம் தேதி தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்பது தெரியவரும்.

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஏற்கனவே சந்தித்துப் பேசியிருந்தனர். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+