5000 மீனவர்களுடன் ராமேஸ்வரம் வரப் போகிறாராம் 'அக்யூஸ்ட்' டக்ளஸ்!
யாழ்ப்பாணம்: இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை நிறுத்த எச்சரிக்கை விடுக்கும் வகையில், 5000 மீனவர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ராமேஸ்வரம் நோக்கி வரப் போகிறாராம்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த டக்ளஸ் அங்கு தன் இஷ்டத்திற்குப் பல விஷயங்களையும் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை கடுமையாக எச்சரிக்கும் வகையில் பேசினார். அவர் கூறுகையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்தியத் தமிழர்களுக்கு எச்சரிக்கும் வகையில் அடுத்த மாதத்தில், சுமார் 5 ஆயிரம் மீனவர்களுடன் ராமேஸ்வரத்தை நோக்கி சென்று கடலில் வைத்து ஒரு எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1000 படகுகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இதற்கு நானே தலைமை தாங்குவேன்.
இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவை மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ் .வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் ராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என்றார் டக்ளஸ்.
சென்னையில் கொலை வழக்கில் அக்யூஸ்ட் அதாவது குற்றம் சாட்டப்பட்டவராக உள்ள டக்ளஸ் தேவானந்தா, தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகனடப்படுத்தப்பட்டனர். இதனால் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் கால் கூட வைக்க முடியாமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் ராமேஸ்வரத்தை நோக்கி அவர் படையெடுக்கப் போகிறாராம்.
தனது பேட்டியின்போது மேலும் அவர் உளறுகையில், சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் சேர்த்து விட்டார். ஆனால், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று பேசினார். விடுதலைப் புலிகளின் கை வலுவாக இருந்த நேரத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்தான் இந்த டக்ளஸ். ஆனால் தற்போது மைக்கைப் பிடித்து மனம் போனபடி பேசும் அளவுக்கு அவருக்கு நேரம் வந்து விட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications