இன்று மாலை ராஜபக்சேவுடன் இந்திய எம்.பிக்கள் குழு- என்ன பேசுவார்கள்?

Subscribe to Oneindia Tamil

Rajapakse
யாழ்ப்பாணம்: இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பிக்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ளது. முன்னதாக காலை உணவுடன் நாளை சந்திப்பதாக இருந்த இந்த சந்திப்பு இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பிக்கள் தங்களது பயணத்தின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டனர். இன்று மாலை ராஜபக்சேவை அவர்கள் சந்திக்கின்றனர். அதன் பின்னர் நாளை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அதைத் தொடர்ந்து இந்தியா புற்பட்டு வருவார்கள்.

இந்தப் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி.யும், டாக்டர் ராமதாஸின் சம்பந்தியுமான எம்.கிருஷ்ணசாமி கூறுகையில்,

வடக்கு மக்களிடம் கேட்டறிந்த அவலங்களையும் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தையும் ராஜபக்சேவை சந்திக்கும்போது எடுத்துரைப்போம்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளுடனான சிறந்த வாழ்வை உறுதிப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம்.

கடந்த நான்கு நாட்களாக இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டதுடன் நேரடியாகவும் கேட்டறிந்தோம்.ஆகவே இந்தியக் குழுவின் விஜயம் வெற்றியளித்துள்ளது.

ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜின் தலைமையிலான குழுவினர் இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்களையும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் பேச உள்ளனர்.

குறிப்பாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முக்கியமான விஷயமாகவே இந்தியக் குழு கருதுகின்றது. எனவே இதனை ராஜபக்சேவுடன் பேசி அவரது திட்டங்களையும் ஏனைய தரப்புகளுடன் கேட்டறிந்த விஷயங்களையும் டெல்லிக்குக் கொண்டுச் செல்வோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+