ராஜபக்சேவை திடீரென சந்தித்த சுஷ்மா சுவராஜ்- 'பிரேக்பாஸ்ட்' சாப்பிட்டபடி பேச்சு!
கொழும்பு: இந்திய எம்.பி்க்கள் குழு இன்று மாலை ராஜபக்சேவை சந்திக்கவுள்ள நிலையில் இன்று காலை குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் மட்டும் தனியாக போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே. இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்துடன் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பிக்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் நாளைய சந்திப்பு ரத்து செய்யப்பட்டு இன்று மாலை இந்தியக் குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கு ராஜபக்சே காலை உணவு அளித்து கெளரவித்துள்ளார். இருவரும் சாப்பிட்டபடியே பேசியுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் பந்துல்ல ஜெயசேகரா கூறுகையில், இந்தியத் தூதர் அசோக் காந்தாவும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்கள் தவிர இலங்கை அமைச்சர்கள் பெரீஸ், லலித வீரதுங்கா ஆகியோரும் உடன் இருந்தனர் என்றார்.
சக இந்தியக் குழுவினரைத் தவிர்த்து விட்டு சுஷ்மா மட்டும் போய் ராஜபக்சவை பார்த்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications