'அக்யூஸ்ட்' டக்ளஸ் 'ஈழத்து எம்.ஜி.ஆராம்'-காங். எம்.பி. புளகாங்கித புகழாரம்!!

Subscribe to Oneindia Tamil

Douglas Devanantha
யாழ்ப்பாணம்: சென்னையில் கொலை வழக்கில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வரும் டக்ளஸ் தேவானந்தாவை ஈழத்து எம்.ஜி.ஆர். என்று அழைத்து ஈழத் தமிழர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கேவலப்படுத்தியுள்ளார் தமிழக காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணம் வந்தனர். அங்கேயே இரவு தங்கினர். முன்னதாக மாலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அவர்கள் வந்தபோது அவர்களை டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.

அப்போது அவரை ஈழத்து எம்.ஜி.ஆர். என்று அழைத்துப் பாராட்டினார் சுதர்சன நாச்சியப்பன். இதைக் கேட்டு அக்யூஸ்ட் டக்ளஸுக்கு பயங்கர சிரிப்பாகி விட்டது. வாய் விட்டு பளபளவென சிரித்தார். ஆனால் மற்றவர்களுக்குத்தான் இது புரியவில்லை. எதற்காக நாச்சியப்பன் எம்.ஜி.ஆர் என்று டக்ளஸை அழைத்தார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

உலகத் தமிழர்கள் மனதில் எம்.ஜி.ஆருக்கு பெரிய இடம் உண்டு. குறிப்பாக ஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரை கடவுள் போல பார்ப்பவர்கள். அப்படிப்பட்டவரைப் போய் கொலைகார டக்ளஸை சமப்படுத்தி நாச்சியப்பன் பேசியது ஈழத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்து ராஜபக்சேவை சந்திக்கும்போது ஈழத்து மகாத்மா என்று நாசசியப்பன் அழைப்பாரோ....?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+