நெல்லையில் பெண் எல்.ஐ.சி. ஏஜெண்டை கடத்தி சீரழித்த ஆட்டோ டிரைவர்
நெல்லை: விஜயநாராயணம் அருகே பெண் எல்.ஐ.சி. ஏஜெண்டை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள கழுவூர் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி பியூலா ஜீவரத்தினம். எல்.ஐ.சி. ஏஜெண்ட். அவர் எல்.ஐ.சி. அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் பரப்பாடி வந்தார். அங்கிருந்து ஊருக்கு செல்ல ஒரு ஆட்டோவை அமர்த்தினார். ஆட்டோ புறப்பட்ட சிறிது நேரத்தில் கழுவூருக்கு செல்லாமல் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றது. இதைப் பார்த்த பியூலா ஆட்டோவை ஏன் இப்படி வேறு பாதையில் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் அவரை மிரட்டி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடமிருந்து தப்பி வந்த பியூலா விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் லிங்கதிருமாறன் விசாரணை நடத்தி விஜயநாராயணம் அருகே உள்ள வடிவாள்புரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவரை கைது செய்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பியூலாவுக்கு இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடக்கிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications