அமெரிக்க அதிபர் தேர்தல்- ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி: கருத்துகணிப்பு முடிவு

வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுவது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்டது. குடியரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட மிட் ரோம்னி, ரிக் சான்டோரம், கிங்ரிச் மற்றும் ரான் பால் ஆகியோர் களத்தில் உள்ளனர். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.
இதில் பெரும்பாலான இடங்களில் மிட் ரோம்னி வெற்றி பெற்று வருகிறார். இதற்கிடையே ரோம்னிக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வந்த ரிக் சான்டோரம் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் டைமஸ்/சிபிஎஸ் நியூஸ் நடத்திய கருத்துகணிப்பில் 47 சதவீதம் பேர் ஒபாமாவுக்கும், 44 சதவீதம் பேர் ரோம்னிக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதற்கிடையே ரோம்னி தான் எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார். அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ஒபாமாவை மூட்டை, முடிச்சுகளை கட்ட ஆரம்பிக்குமாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications