புளியங்குடி அருகே பதற்றம்- முதல் மரியாதை பிரச்சனையில் கோவிலில் குடிபுகுந்து போராட்டம்
திருநெல்வேலி: புளியங்குடி அருகே கோவில் திருவிழாவில் ஒருதரப்பினருக்கு முதல் மரியாதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக கோயிலில் குடிபுகுந்து கிராம மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும் செவல் கிராமத்தில் உள்ள உச்சி்மகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க. உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மே 1-ல் பூக்குழி விழா நடைபெற உள்ளது. இதில் ஜமீன்வாரிசான கோமதி முத்துராணி தரப்பினருக்கு முதல் மரியாதை கொடுக்கக் கூடாது என்று பிரச்சனை எழுப்பப்பட்டது. இதனால் கடந்த வாரம் தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதானகூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் வழக்கம் போல் திருவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் ஆர்.டி.ஓ. முடிவைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கோயிலில் குடிபுகும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜமீன் வாரிசான கோமதி முத்துராணி தரப்பினர் தற்போதைய பூக்குழி திருவிழாவை நடத்தி கொள்ளவும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கிராம மக்கள் வரும் ஆடி பொங்கல் திருவிழாவை நடத்த அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இருப்பினும் இன்று கோயில் வாளகத்தில் 2 வது நாளாக கோவிலில் குடிபுகும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications