எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு: லட்சக்கணக்கானோர் போராட்டம்
கெய்ரோ: எகிப்தில் உருவான புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து லட்சக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எகிப்தில் 32 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது. இதனால் அவரது ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியையும் விரும்பவில்லை. ஜனநாயகமே தேவை என்பதை வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் நேற்று ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.
விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ராணுவம் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
32 ஆண்டுகால முபாரக் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மே 23-ந் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் ராணுவ ஆட்சியும் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய ராணுவ ஆட்சியாளர்களே தேர்தலிலும் முறைகேடுகள் செய்து தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான இஸ்லாமிக் கட்சியின் அதிபர் வேட்பாளரை செல்லாது என்று அறிவித்தது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை ராணுவத் தரப்பு மேற்கொண்டுவருவதால்எகிப்து மீண்டும் ஒரு போர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications