மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் இல்லை: அரசு

Subscribe to Oneindia Tamil

Power
சென்னை: தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையே மின் கட்டணம் செலுத்தும் முறை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாத விவரம்:

தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக): மின் கட்டணத்தை இப்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டுவதைத் தவிர்த்து மாதாமாதம் கட்டுவதற்கு அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மாதந்தோறும் மின் கட்டணத்தை வசூலிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஊழியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி குறை போன்றவையும் உள்ளன. எனவே, இப்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிப்பதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்போ, எதிர்ப்போ இல்லை. ஆதலால், இந்த முறையே தொடரும்.

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):
முன்பு மின் கட்டணம் செலுத்துவதற்கு 15ம் தேதி கடைசி நாள் என இருந்தது. இப்போது, மின் கணக்கீடு எடுத்த நாளிலிருந்து 10 நாள்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. இதனால், மின் கணக்கீடு எப்போது நடக்கிறது என பொதுமக்களுக்கு தெரியாததால் 90 சதவீத மக்கள் அபராதத்துடன்தான் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். எனவே, முன்பு போல மின் கட்டணம் செலுத்த 15-ம் தேதி கடைசி நாள் என மின் வாரியம் அறிவிக்குமா? மேலும், எந்த இடத்தில் இருந்தும் கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுமா?

அமைச்சர்: மின் கட்டணம் செலுத்துவதில் முன்பு இருந்த நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்கவே இப்போதைய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் மாதத்தில் மட்டுமே சிறிது குழப்பம் இருக்கும். மின் கணக்கீடு செய்யும் பணி ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து நடைபெறுவதால் அதிலிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்துவதில் குழப்பம் எதுவும் இல்லை. மின் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றார்.

பாமாயில் இருந்தால் சர்க்கரை இல்லை....

தேமுதிக உறுப்பினர் சுந்தர்ராஜன்: ரேஷன் கடைகள் மதியம் 1 மணிக்கு மேல் இயங்குவதே இல்லை.

அமைச்சர் செல்லூர் ராஜு: 8 மணி நேர வேலைக் கணக்குப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரத்திலும் ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறது. சில இடங்களில் இரவு 7 மணி வரை கூட ரேஷன் கடைகள் திறந்துள்ளது. அதனால் பொத்தாம்பொதுவாக கூறாமல், எந்த கடை சீக்கிரமாக மூடி விடுகிறார்கள் என்று கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சுந்தர்ராஜன்: சில கடைகளில் பாமாயில் இருந்தால் சர்க்கரை இல்லை, மண்ணெண்ணெய் இல்லை....

அமைச்சர் காமராஜ் குறுக்கிட்டு: எல்லா ரேஷன் கடைகளிலும் எல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர் சொல்வது போல் ஒன்று இருந்தால், ஒன்று இல்லை என்று எந்த கடையில் சொல்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் அவைக்கு தெரிவிக்கட்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+