கட்டிக்கிறேன்னு சொல்லி செக்ஸ் தொல்லை கொடுத்தார்: ராணுவ அதிகாரி மீது பெண் ராணுவ அதிகாரி புகார்
டேராடூன்: டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் லெப்டினன்ட் கர்னல் மீது போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லெப்டினன்டாக இருக்கும் பெண் ஒருவர், உத்தரகாசியில் பணிபுரியும் லெப்டின்ன்ட் கர்னல் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்பப்படுத்தியதாக அந்த பெண் அதிகாரி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
அந்த பெண் அதிகாரி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன் பிறகு லெப்டினன்டை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த திருமணத்தை பதிவு செய்யுமாறு கேட்டதற்கு அந்த அதிகாரி தான் ஏற்கனவே திருமணமானவன் என்று கூறி மறுத்துள்ளார் என்றனர்.
அவரது புகாரின்பேரி்ல் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications