இலங்கை பயணத்தில் எனக்குப் பூரண திருப்தி-சுஷ்மா அறிவிப்பு

மேலும் ராஜபக்சேவுக்கும், அவரசு அரசுக்கும் சாதகமான முறையிலும் அவர் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்த சுஷ்மா தனது பயணம் குறித்தும் அவரிடம் நேரில் விளக்கினார். அறிக்கையையும் அளித்தார். இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய சுஷ்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னிடம் கேட்டால், இந்தப் பயணம் திருப்திகரமாக இருந்தது என்றுதான் சொல்வேன். நாங்கள் அங்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தோம்.
முன்பு முகாமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இருந்தனர். தற்போது அவர்களில் 6000 பேரைத் தவிர அனைவரும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களையும் ஜூன் மாதத்திற்குள் மறுகுடியமர்த்தல் செய்து விடுவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளது.
நாங்கள் முகாமுக்குச் சென்றபோது அங்கு பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். ஆண்கள் அனைவரும் வேலைக்குப் போயிருந்தனர்.
மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் நல்ல முறையில் நடந்து வருகின்றன. குறித்த காலத்திற்குள்ளாகவே அவை முடியும் நிலையில் உள்ளன.
நான் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியபோது குடியிருப்பு பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து ஆலோசித்தேன். அதுகுறித்து ஆவண செய்வதாக அவர் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 13வது பிரிவு திருத்தம் குறித்து ராஜபக்சேவே பேசினார்.
எல்எல்சிஆர் அறிக்கை என்பது உங்களது குழந்தை. எனவே அதை நீங்கள் முழுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை ராஜபக்சேவிடம் சொன்னேன்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழர் கட்சிகளின் கருத்து. இதை இலங்கையும் கூட ஆட்சேபிக்கவில்லை. எனவே உங்களுக்குள் பேசித் தீர்க்க என்ன சிரமம் உள்ளது என்று அவர்களிடம் கேட்டேன். விரைவில் இரு தரப்பும் அமர்ந்து பேசி அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் என்றார் சுஷ்மா சுவராஜ்.
மனித உரிமை மீறல் குறித்தோ, போர்க்குற்றங்கள் குறித்தோ, கொல்லப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்தோ இலங்கை அரசுடன் சுஷ்மா சுவராஜும் மற்ற உறுப்பினர்களும் பேசவில்லை என்பதை இது வெளிக்காட்டுகிறது.
அதேபோல தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதல் குறித்தும் ராஜபக்சேவிடம் எதையும் பேசவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications