இந்தியாவின் முதல் 'உளவு பார்க்கும் செயற்கைக் கோள்' ரிசாட்-1: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ரிசாட்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
இன்று அதிகாலை 5.47 மணிக்கு ரிசாட்-1 செலுத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இது மாபெரும் வெற்றி என்று பிரகடனம் செய்தார்.
அவர் கூறுகையில், பிஎஸ்எல்வி சி19 ராக்கெட் மூலம் இந்தியாவின் முதலாவது சுயேச்சையான ரேடார் இமேஜிங் சாட்டிலைட், அதாவது ரிசாட்-1 வெற்றிகரமாக சுற்றுப் பாதையில் விடப்பட்டது. இது இந்தியாவுக்குப் பெருமையான நேரமாகும் என்றார்.
மொத்தம் 1258 கிலோ எடை கொண்ட ரிசாட்-1 செயற்கைக் கோள், இரவிலும், பகலிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது. மேகக் கூட்டம் அதிகம் இருந்தாலும், பனிமூட்டம் அதிகம் இருந்தாலும் கூட துல்லியமாக தனது இலக்கைப் படம் பிடிக்க முடியும்.
செயற்கைக் கோளை வடிவமைக்க மற்றும் செலுத்த மொத்தம் ரூ. 500 கோடி செலவாகியுள்ளது. இந்தியாவின் அதிக செலவுபிடித்த முதல் திட்டமும் இதுதான். வெள்ளம், புயல் போன்ற இயற்கைக் சீற்றங்களை கண்காணிக்க அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் இது என்றாலும் கூட உளவு செயற்கைக் கோளாக இது சர்வதேச பார்வையில் பார்க்கப்படுகிறது.
இந்தியா இதுவரை ஏவிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்ட செயற்கைக் கோள் இதுதான்.
தமிழகப் பெண் விஞ்ஞானி வளர்மதி
ரிசாட்-1 திட்ட இயக்குநராக செயல்பட்டவர் என்.வளர்மதி. ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் திட்டம் ஒன்றின் இயக்குநராக செயல்பட்ட முதல் பெண் இவர்தான். மேலும் இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் தமிழகத்திற்கும் பெருமை கூடுகிறது.
ஏற்கனவே ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியா 2009ம் ஆண்டிலேயே செலுத்தியுள்ளது. ஆனால் அது முற்றிலும் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது செலுத்தப்பட்டுள்ள ரிசாட்-1 முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களையும், கால நிலை மாற்றங்களையும் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டே, பாகிஸ்தான், சீனா போன்ற 'பக்கத்து வீடுகளில்' நடப்பதையும் இனிமேல் நம்மால் உளவு பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications