அணு மின் நிலைய வருவாயில் 2% வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்: ஜெயின்

Subscribe to Oneindia Tamil

NPCIL chairman and managing director S.K. Jain
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய வருவாயில் 2 சதவீதம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தேசிய அணு மின் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூடங்குளத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்திற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டபோது திட்டத்திற்கான இடத்தில் 1 வீடு கூட இல்லை. விவசாயமும் இல்லை. கூடங்குளம் திட்டத்திற்காக மக்கள் யாரும் அப்புறப்படுத்தப்படவில்லை. இனியும் யாரும் அப்புறப்படுத்தப்படமாட்டார்கள்.

கூடங்குளத்தில் 900 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் சி, டி பிரிவு ஊழியர்களில் 95 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 50 சதவீதம் பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மூலம் 4 கிராம பஞ்சாயத்துகள் உள்பட 27 கிராமங்களில் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூடங்குளம் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட நீதியில் இருந்து 50 படுக்கைகள் கொண்ட ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கிடைக்கும் வருவாயில் 2 சதவீதத்தை இந்த பகுதியின் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+