மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: அன்புமணி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில். மருத்துவக் கல்லூரி தொடங்க முறைகேடாக அனுமதி கொடுத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உட்பட 9 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது 2008-ம் ஆண்டு இந்தூரில் எந்த வசதியுமற்ற நிலையில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவர்கள் இருவர், இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளுக்கு அமைய உரிய வசதிகள் இல்லாத நிலையிலும் விதிகளை மீறி இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு.

2010-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதும் கடந்த 2 ஆண்டாக விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+