மூத்த காங். தலைவர் திவாரிக்கு மரபணு சோதனை: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோகித் சேகர் என்ற இளைஞர் என்.டி. திவாரிதான் தமது தந்தை என்று உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தார். திவாரியின் வீட்டில் பணிபுரிந்த உஜ்ஜைலா என்ற பெண் மூலம் தாம் பிறக்க நேரிட்டது என்றும் இதற்காக கூடுதல் ஆவணங்களாக ஏராளமான புகைப்படங்களையும் ரோகித் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இதை தொடர்ந்து என்.டி. திவாரி நிராகரித்து வந்தார்.
இந்த வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்த வழக்கில் மரபணு சோதனை நடத்துவதற்கும் உடன்படாமலேயே என்.டி. திவாரி இழுத்தடித்து வந்தார். மேலும் மரபணு சோதனை செய்ய யாரும் தம்மை கட்டாயப்படுத்தவும் முடியாது என்றும் திவாரி கூறியிருந்தார். ஒருகட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே அவரது ரத்த மாதிரி எடுத்து மரபு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திவாரி அப்போது ஆஜராகவில்லை.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மரபணு சோதனை நடத்த என்.டி.திவாரி தமது ரத்த மாதிரியை கொடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தேவைப்படுமேயானால் போலீசார் உதவியை ரோகித் நாடலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான என்.டி.திவாரி ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது பெண்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து மசாஜ் செய்த விவகாரத்தில் நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications