சென்னை-தூத்துக்குடி இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடிப்பு- 2 பேர் காயம்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கத்தில் மேன்சன் ஒன்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் நள்ளிரவு 1.30 மணியளவில் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது.
இச்சம்பவத்தில் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்குள் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டுவந்து அவர்கள் பதுக்கியது ஏன் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை சென்னை போலீசார் முதலில் மறைக்கவே பார்த்துள்ளனர். ஆனால் கீழ்ப்பாக்கம் பொதுமக்கள் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த தகவலையடுத்து வெடிகுண்டு சம்பவம் உண்மை என்பதை போலீசார் ஒப்புக் கொண்டனர்.
சென்னையில் முக்கிய பிரமுகர்கள் யாரையேனும் போட்டுத் தள்ள வந்தவர்கள் எனத் தெரியவந்து அதை அப்படியே மறைத்துவிட போலீஸ் முயன்றதா? என்பதும் சந்தேகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications