டப்பா குண்டு தயாரிச்சோம்..டமார்னு வெடிச்சிருச்சு: குண்டுவெடிப்பில் காயமடைந்த ரவுடி வாக்குமூலம்!
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோதே குண்டுவெடித்துள்ளதும் காயமடைந்த இருவரும் ரவுடிகள் என்றும் பரப்ரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடிகள் சுகந்தன், சத்யா. இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். சுகந்தனின் தந்தை செல்வம் 1999-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவன் ரவுடியாக வளர்ந்துள்ளான். இவனும் கொலை வழக்குகளில் சிக்கியுள்ளான். இந்நிலையில் சுகந்தனுக்கு அவனது எதிரிகள் குறிவைத்து பின் தொடர்ந்து வந்தனர். இதனிடையே தூத்துக்குடியைவிட்டு சத்யா வெளியேறி சென்னையில் தஞ்சமடைய அவனைத் தொடர்ந்து சுகந்தனும் சென்னை வந்துவிட்டான்.
இந்நிலையில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக வெடிகுண்டுகளைத் தயாரிக்க முடிவு செய்தனர். அப்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக தெரியவந்ததுள்ளது.
இது பற்றி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் சத்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. சம்பவ நாளன்று காலையில் சுகந்தனுக்கு கொலை மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து டப்பா வெடிகுண்டு தயாரிக்கத் திட்டமிட்டோம். இதற்காக சுகந்தன் தாம் கொண்டுவந்திருந்த வெடிமருந்தை டப்பாவில் நிரப்பி கல்லால் வைத்து தட்டினான். அப்போது அது வெடித்துவிட்டது என்று கூறியுள்ளான்.
சுகந்தனுக்கு விரல்கள் துண்டாகியுள்ளன. சத்யாவுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications