லைபீரிய முன்னாள் அதிபர் டெய்லரை போக் குற்றவாளியாக அறிவித்தது சர்வதேச நீதிமன்றம்

கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை லைபீரியாவின் பக்கத்து நாடான சியாராலியோனில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இந்த போருக்காக வைரங்களை விற்று ஆயுதங்களைக் கடத்தியதாகவும் கொத்தடிமைகளை நாடு கடந்து அனுப்பி இனப்படுகொலையில் ஈடுபடச் செய்ததாகவும் டெய்லர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சியாராலியோனில் நடந்த உள்நாட்டுப் போரில் மொத்தம் 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
சார்லஸ் டெய்லர் மீதான புகாரை ஐ.நா. ஆதரவுடன் சர்வதேச நீதிமன்றம் விசாரித்தது. சார்லஸ் டெய்லர் குற்றவாளி என்று அறிவித்திருந்தாலும் அவருக்கான தண்டனை இப்போது அறிவிக்கப்படவில்லை.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஒருநாட்டின் அதிபர் நிலையில் ஒருவரை போர்க் குற்றவாளி என தீர்ப்பளித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் ராணுவ தளபதிகளும் அதிகாரிகளும் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தீர்ப்புக்கு சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கருத்து தெரிவிக்கையில், போர்க் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றார்.
அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் விக்டோரியா நுலந்தும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு எப்போது இந்த தண்டனை?
லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஏற்கெனவே சர்வதேச அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் லைபீரிய அதிபருக்கு எதிரான தீர்ப்பு இலங்கைக்கு நிச்சயம் கலக்கத்தையே ஏற்படுத்தும். மேலும், சார்லஸ் டெய்லரைப் போல ராஜபக்சேவும், அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படப் போவது எப்போது என்ற ஆதங்கமும் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications