கர்நாடகத்தில் சோனியா- கறுப்புக் கொடி காட்டிய மாதிகா அமைப்பினர் கைது
Subscribe to Oneindia Tamil
தும்கூர்: கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தும்கூர் சித்தகங்கா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக வந்தபோது அவருக்கு மாதிகா தண்டோரா அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாதிகா அமைப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று சோனியாவிடம் நேரில் வலியுறுத்திய நிலையிலும் அவர் தொடர்ந்தும் தங்களது கோரிக்கையை புறக்கணித்து வருவதால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தும்கூருக்கு வருகை தந்த சோனியாவுக்கு அந்த அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டினர். கறுப்புக் கொடி காட்டிய அந்த அமைப்பின் மூவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications