முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கு ஆளுநர் பதவி?
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் நவீன் சாவ்லாவை ஆளுநராக நியமிக்க ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாக உள்ளது. மேலும் ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலும் கோவா மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் இந்திரா காந்தியின் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் செரீப், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சீனிவாஸ் திவாரி ஆகியோரது பெயர்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications