மூழ்கும் காங்கிரஸை காப்பாற்றவே சச்சினுக்கு எம்.பி. பதவி: ராம்தேவ் சாடல்
டெல்லி: காங்கிரஸ் கட்சி மூழ்கும் நிலையில் இருந்து தப்பிக்கவே சச்சின் தெண்டுல்கருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியைக் கொடுத்துள்ளது என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சச்சினை எம்.பியாக்கும் முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தலை தூக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் சச்சினுக்கு பதவி கொடுத்தால் யாரும் எதிர்க்கமாட்டார்கள் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டு காரியத்தை முடித்துள்ளது.
சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும் நாட்டு மக்கள் எதிர்க்கப்போவதில்லை. ஆனால் சில அரசியல் கட்சிகள் இதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பதால் எம்.பி. பதவியை சச்சினுக்கு காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. அனேகமாக இந்த எம்.பி. பதவியை சச்சின் ஏற்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்.
இருப்பினும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டியது சச்சின் பொறுப்பு. நாடாளுமன்ற மாநிலங்களவையில் சச்சின் அமைதி காத்துக் கொண்டிருப்பாரா? அல்லது ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராக குரல் கொடுப்பாரா என்றும் அவர் விளக்க வேண்டும் என்றார் ராம்தேவ்.












Click it and Unblock the Notifications