புதுக்கோட்டையில் தனித்து போட்டியிட்டு திராணி காண்பிக்கிறதாம் ஐ.ஜே.கே.
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதன் நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் பார்க்கவன் சமூக நூற்றாண்டு விழா மற்றும் பார்க்கவ குல முன்னேற்ற சங்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 1911-மாண்டு பார்க்கவகுல மக்களுக்காக சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதில் உடையார், மூப்பனார், நயினார் ஆகிய உட்பிரிவுகளை உள்ளடக்கிய பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் இணைந்துள்ளனர். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஐ.ஜே.கே. தனித்துப் போட்டியிடும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications