பாலியல் புகார்- பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வேதியியல் துறை தலைவரான பேராசிரியர் செல்லமணி மீது பாலியல் புகார் கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதுகலை முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு பேராசிரியர் செல்லமமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேராசிரியர் செல்லமணி மீது பதிவாளர் மாணிக்கத்திடம் மாணவர்கள் புகார் செய்திருந்தனர். ஆனாலும் செல்லமணி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே செல்லமணி இத்தகைய பாலியல் சீண்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் செல்லமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக் கழக கேட்டைப் பூட்டி விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பல்கலைக் கழக பதிவாளர் மற்றும் நெல்லை மேயர் ஆகியோர் இன்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் செல்லமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+