தமிழகத்தில் இனி அனைத்து சேவைகளுக்குமே '100' தான்!
சென்னை: தமிழகத்தில் இனி ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்புத்துறை என்று அனைத்து சேவைகளுக்கும் பொதுவாக 100 எண்ணை ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போலீசுக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, ஆம்புலன்ஸுக்கு 102, ஆட்டோ கட்டணம் குறித்த புகார்களுக்கு 103 ஆகிய எண்களை டயல் செய்ய வேண்டியுள்ளது. அதிலும் சென்னை, மதுரை, திருச்சியில் மட்டும் தான் போலீசுக்கு 100. மாநிலத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் மக்கள் அந்தந்த காவல் நிலைய்ததின் தொலைபேசி எண்களில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நிலையை மாற்றி அமெரிக்காவில் எப்படி அனைத்து சேவைகளுக்கு 911 இருக்கிறதோ அதேபோன்று தமிழகத்தில் அனைத்து சேவைகளுக்கும் 100ஐ பொதுவான எண்ணாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அண்மையில் ஒருவர் கிணற்றில் விழுந்துவி்ட்டார். நாங்கள் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டோம். ஆனால் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்த அவரை கிணற்றில் இருந்து தூக்கும் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இது கொலையா இல்லையா என்று போலீசார் விசாரிக்க வேண்டியிருந்தது. அதிக மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் அனைத்து சேவைகளுக்கும் பொதுவாக ஒரு எண்ணை வைப்பது அவசியமான ஒன்று என்றார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்தகான முயற்சிகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications