கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில்விட்ட ரவி எங்கே? பெங்களூர் போலீசார் சென்னையில் முகாம்
சென்னை: பெங்களூரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டு ரவியைத் தேடி பெங்களூர் போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் கள்ள நோட்டுகளை வைத்திருந்ததாக தமிழக மாணவர் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ரவி என்பவன் மூலமே தங்களுக்கு கள்ள நோட்டு வந்ததாகவும் அவன் கொடுத்த பணம் கள்ள நோட்டு எனத் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்..
ஈழத்தமிழ் மாணவருக்கு வலை
மேலும் தனது கள்ள நோட்டுப் புழக்கத்துக்கு ஈழத் தமிழ் மாணவர்களை ரவி பகடைக்காயாகப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இலங்கையிலிருந்து அம்மாணவர்கள் கொண்டுவரும் கரன்சி நோட்டுகளுக்கு கூடுதலாக பணம் தருவதாகக் கூறி ரவி கள்ள நோட்டுகளையே அள்ளி வீசியிருக்கிறான். இதனால் பல மாணவர்கள் அவனிடம் தொடர்ந்து பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டிருந்திருக்கின்றனர். தங்களுக்கு ரவி கொடுப்பது அனைத்துமே கள்ள நோட்டு எனத் தெரியாமலே அப்பாவி மாணவர்கள் ஏமாந்து போயிருக்கின்றனர்.
பிடிபட்ட மாணவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரவியைப் பற்றி பெங்களூர் போலீசார் விசாரிக்கத் தொடங்கியபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அச்சடிப்பு?
பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வரும் ரவி அங்கிருந்தே கள்ள நோட்டுகளைக் கொண்டு வந்திருப்பதாகவும் சில நேரங்களில் தமிழகத்திலேயே கள்ளநோட்டை அச்சடித்திருப்பதாகவும் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. வேறு சில வெளிநாடுகளுக்கும் அவன் சென்று திரும்பியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து தமிழக போலீசாரைத் தொடர்பு கொண்டு கள்ளநோட்டு ரவி என்பவனைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். முதலில் தமிழக போலீசாருக்கு எந்த ரவி என்பதில் குழப்பம் இருந்தது. பின்னர் ஓசூரைச் சேர்ந்த ரவி என்பவன்தான் கள்ள நோட்டு புழக்கத்தில் பலமுறை சிக்கியவன் என்பதால் அவனாகத்தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெங்களூர் அசோக்நகர் போலீசார் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் முகாமிட்டு ரவியைத் தேடி வந்தனர். தற்போது ரவி சென்னையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சென்னையில் பெங்களூர் போலீசார் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் ரவி தமிழகத்தைவிட்டு மலேசியாவுக்கு தப்பி ஓடியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications