கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு எக்ஸ்ட்ரா பவர் கொடுங்க: பிரதமருக்கு நாராயணசாமி கோரிக்கை

இது குறித்து அவர் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரில் பாதிக்கப்பட்டு அங்குள்ள முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்விற்காக இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் ரூ.1000 கோடியில் ரயில்வே திட்டம், ரூ.1, 250 கோடி செலவில் ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டி வழங்கும் திட்டம், 500 மெகாவாட் மின்சார உற்பத்தி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முகாம்களில் அகதிகளாக உள்ள தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கும் 13வது சட்ட திருத்தத்தை கொண்டு வர இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கூடங்குளத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும். அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 2 கடிதங்கள் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்பற்றாக்குறையைப் போக்க கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். இது தொடர்பாக அவர் விரைவில் நல்ல பதிலைக் கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications