For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

48 மணி நேரத்தில் கலெக்டர் அலெக்ஸை விடுவிக்க மாவோயி்ஸ்டுகள் ஒப்புதல்- சட்டிஸ்கர் முதல்வர்

Google Oneindia Tamil News

Alex Paul Menon
டெல்லி: சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனனை இன்னும் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்க மாவோயிஸ்டுகள் ஒப்புக் கொண்டிருப்பதாக சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,அரசின் சார்பில் மாவோயிஸ்டுகளுடன் பேசச் சென்ற மத்தியஸ்தர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பரஸ்பர உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.எனவே இன்னும் 48 மணி நேரத்தில் கலெக்டர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறோம் என்றார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பது தொடர்பான உடன்பாடு ஏதும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக 17 மாவோயிஸ்ட் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பி்ல கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையே என்ன உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்குகளைப் பரிசீலனை செய்ய 3 உறுப்பினர் குழு ஒன்றை அமைக்க அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.

English summary
Chhattisgarh Chief Minister Raman Singh has said he hopes the Maoists will release Sukma District Collector Alex Paul Menon within 48 hours. "The mediators from the government as well as from Maoists side have signed on a two-page draft agreement and we expect that Alex would be released within 48 hours," Mr Singh told reporters. According to sources, the agreement between the Maoists and the government does not involve the release of any jailed Maoists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X