விளாத்திகுளத்தில் ஓடு்ம் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்காரர்
தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் ஓடும் பேருந்தில் மாணவியிடம் அத்துமீறிய போலீஸ்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மலைமதி விஜயன். அவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே போல் காவல் நிலையத்தில் பணியாற்று்ம் ஒருவரது 16 வயது மகள் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வழக்கம் போல் மாணவி பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அதே பேருந்தில் வந்த மலைமதி விஜயன் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சல் போட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஆத்திரமடைந்து மலைமதி விஜயனை கண்டித்தனர். ஆனால் அவர் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பேருந்தை விளாத்திகுளம் காவல் நிலையத்துக்கு விடுமாறு டிரைவரிடம் கூறினர். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து பயணிகள் அனைவரும் விளாத்திகுளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி பொறுப்பு ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விஜயனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், அவர் இது போன்ற புகார்களில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications