இலங்கையில் மசூதி இடிப்பு- சென்னை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 150 பேர் கைது
சென்னை: இலங்கை தமிழ் முஸ்லிம்களின் மசூதியை சிங்கள வெறியர்கள் இடித்ததைக் கண்டித்து சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை மசூதி
இலங்கை தம்புள்ளை நகரில் 80 ஆண்டு பழமை வாய்ந்த ஹைரியா மசூதியை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். ஏற்கெனவே இலங்கையில் தமிழர் பகுதிகளில் பண்பாட்டுச் சின்னங்கள், கோவில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை அழித்தும் சிதைத்தும் சேதப்படுத்தியும் வருகிற சிங்கள இனவெறியர்கள், தமிழ் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களையும் சிதைக்கத் தொடங்கியுள்ளனர்.
திருமா போராட்டம்
சிங்கள இனவெறியர்களின் இச்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் குவியத் தொடங்கினர். முற்பகல் 11.30 மணியளவில் தூதரகம் முன்பாக வந்து சேர்ந்த தொல். திருமாவளவன் தமது தொண்டர்களுடன் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றார். முற்றுகைப் பேரணியின் போது சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால் அவர்களைக் காவல்துறையினர் சிறிது தொலைவில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். திருமாவளவன் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை தேசியக் கொடி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications