ஆபாச சிடி: அபிஷேக்சிங்விக்கு எதிராக உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனில் தீர்மானம்
டெல்லி: ஆபா சிடியில் சிக்கி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி, நாடாளுமன்ற சட்ட நிலைக் குழு ஆகியவற்றிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளாக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக்சிங்விக்கு அவரது வழக்கறிஞர் தொழிலிலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர்களில் அப்ஷேக்சிங்வியும் ஒருவர்தான். எந்த உச்சநீதிமன்றத்தை தமது வாதத்தால் வாய் பிளக்க வைத்தாரோ அதே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கூட்டியது. ஆபாச சிடி விவகாரத்தில் சிக்கியிருக்கும் அபிஷேக்சிங்விக்கு தமது வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் எவரும் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என்று அதில் ஒருமனதாக தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறது.
1960-ம் ஆண்டிலிருந்து இதுவரை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இப்படியானதொரு முடிவை எடுப்பது இதுவே முதல் முறை. வழக்கறிஞர் சங்கத்தின் தீர்மான நகல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆபாச சிடி விவகாரம்
அபிஷேக் சிங்வி தமது ஜூனியர் வழக்கறிஞர் ஒருவருடன் ஏடாகூடமாக இருக்கும் சிடி ஒன்று அண்மையில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிடியை வெளியிட தடை கோரி நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறினார் சிங்வி. பெரும் போராட்டத்துக்குப் பிறகு இந்த சிடி போலியானது என்றும் தமது ஓட்டுநர்தான் இந்த போலி ஆபாச சிடியை தயாரித்தார் என்றும் சிங்வி கூறினார்.
கடைசியாக இந்த சர்ச்சையில் காங்கிரஸ் கட்சி அவரை கழற்றிவிட்டது. வேறுவழியின்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவி மற்றும் நாடாளுமன்ற சட்ட நிலைக் குழு ஆகியவற்றிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு சிங்வி ஆளானார். இந்தப் பதவிகளிலிருந்து சிங்வி விலகிய 9-வது நாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் சிங்விக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications