ஆசிய வங்கி நிர்வாக இயக்குநர்கள் குழுத் தலைவரானார் பிரணாப்

ஆசிய வங்கியின் 45-வது மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஆசியப் பகுதி நாடுகளின் நிதி அமைச்சர்களும் அந்த நாடுகளின் ரிசர்வ் வங்கி ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி.சுப்பாராவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ளனர்.
மாநாட்டின்போது, ஆசிய வங்கியின் நிர்வாக உறுப்பினர்கள் குழுவின் (Board of Governors) புதிய தலைவராக பிரணாப் முகர்ஜியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டின் மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய பொறுப்பானது இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட கெளரவம் என்று பின்னர் பிரணாப் தெரிவித்தார்.
மணிலாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய வங்கியில் 67 அங்கத்தினர்கள் உள்ளனர். இதில் ஆசிய நாடுகளின் எண்ணிக்கை 48 ஆகும். அமெரிக்காவும் ஜப்பானும் இந்த வங்கியின் மிகப் பெரிய பங்குதாரர்கள். இந்தியா 5-வது பெரிய பங்குதாரர்.












Click it and Unblock the Notifications