கூடங்குளத்திலிருந்து எங்களுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வேண்டும்- கேரளா

ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழகத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் கேரள அரசு தற்போது கூடங்குளம் விவகாரத்திலும் தமிழகத்துடன் மோதலைத் தொடங்குவதாகத் தெரிகிறது.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக கேரள அரசும், பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தி்ல் 500 மெகாவாட் மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
மே 3ம் தேதி அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளாவில் மின்சார நிலைமை மோசமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடங்குளத்திலிருந்து அதிக அளவிலான மின்சாரத்தை கேரளாவுக்கு ஒதுக்குவது குறித்து சிறப்பான முறையில் பரிசீலிக்க வேண்டும்.
கேரளாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரம் போதுமானதாக இல்லை. மாநிலத்தின் தேவையை தீர்க்கும் வகையில் இல்லை. எனவே கூடங்குளத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பிரிவு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது உற்பத்திப் பிரிவு அடுத்த சில மாதங்களில் இயங்கத் தொடங்கலாம்.
தற்போதைய திட்டப்படி இரண்டு மின் உலைகளும் இயங்கத் தொடங்கும்போது தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கேரளாவுக்கு 266 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் கேரளாவுக்கு 500 மெகாவாட் வேண்டும் என்று உம்மன் சாண்டி கோரியிருப்பது தமிழகத்திற்கு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படும் கேரளாவின் மனப்பான்மையைக் காட்டுவதாக தெரிவதாக கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications