5 ஆண்டுகளாக ரூ86 கோடியில் கட்டப்பட்ட மாயாவதியின் பிரம்மாண்டமான பங்களா

லக்னோவின் மால் அவென்யூவில் கடந்த 2007-ம் ஆண்டு 2.5 ஏக்கரில் மாயாவதிக்காக பங்களா கட்டும் பணி தொடங்கியது. பின்னர் அருகில் உள்ள மற்றொரு 2.5 ஏக்கரிலான பழைய பங்களாவையும் ஆக்கிரமித்த மாயாவதி மொத்தம் 5 ஏக்கரில் பிரம்மாண்ட பங்களா கட்டும் பணியைத் தொடங்கினார்.
14 படுக்கை அறைகளுடன் ஒரு 2 மாடி கட்டிடம், ஆறு அறைகளுடன் ஒரு மாடி கட்டிடம், 20 அடி உயர சுற்றுச் சுவர் என பிரம்மாண்டமாக 2007-ம் ஆண்டு முதல் அவரது ஆட்சிக் காலம் முடியும் வரை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மொத்தம் ரூ86 கோடியை இதுவரை மாயாவதியின் பங்களா கட்டுமானப் பணிக்காக அரசு கஜானாவில் இருந்து எடுத்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட வளாகாத்தில் மாயாவதி, கன்சிராம் ஆகியோரின் சிலைகளும் 5 யானை சிலைகளும் மார்பிள் கற்களால் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை தகவல்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் பெற்றுள்ளார்.
அனேகமாக மொத்தமாக ரூ100 கோடியைத் தாண்டிவிடும் என்கின்றனர் மாயாவதியின் பங்களா கட்டுமானப் பணியில் ஈடுபட்டோர்! அரசு செலவில் வீடு கட்டிக் கொள்ள்லாம் என்பதற்காக கஜானாவையே காலி செய்வது என்பதும் தமக்கு தாமே வீட்டிலேயே சிலை வைத்துக் கொள்வதும்தான் மாயாவதியின் அரசியல் கலாச்சாரம் போல!












Click it and Unblock the Notifications