பெண் ஊழியர்கள் டி சர்ட், ஜீன்ஸ் போட்டா அநாகரீகம்... ஹரியானா அரசு திடீர் தடை!

Subscribe to Oneindia Tamil

Minister Geetha Bhukkal
சண்டிகர்: வழக்கமாக கல்லூரிகளில் தான் மாணவிகள் டிசர்ட், ஜீன்ஸ், போன்றவை போடக் கூடாது என்று தடை செய்வதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் ஹரியானாவில் அரசு பெண் ஊழியர்கள் இதையெல்லாம் போடக் கூடாது என்று வித்தியாசமான ஒரு தடையை அந்த மாநில அரசு விதித்துள்ளது.

அரசுப் பெண் ஊழியர்களுக்கான உடை விதிமுறைகளை அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை விதித்து அறிவித்துள்ளது. அதன்படி, ஜீன்ஸ், டிசர்ட் போட்டுக் கொண்டு அரசு பெண் ஊழியர்கள் பணிக்கு வரக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை மட்டுமே கட்டிக் கொண்டு பணிக்கு வர வேண்டுமாம்.

ஜீன்ஸ், டி சர்ட் போன்றவை அநாகரீகமான உடையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் மட்டுமே நாகரீகமான உடையாக ஹரியானா அரசு கூறியுள்ளது.

ஆண் ஊழியர்கள் பேன்ட், சட்டை மட்டுமே அணிய வேண்டும். இந்த உடை விதிமுறைகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

என்ன காமெடி என்றால் ஹரியானா மாநில பெண்கள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கீதா புக்கல். இவர் த விர மாநில நிதித்துறை ஆணையர், முதன்மைச் செயலாளர், பெண்கள் நலத்துறை இயக்குநர் ஆகியோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+