சிரஞ்சீவி மகளின் போயஸ் கார்டன் வீட்டில் ஐ.டி ரெய்ட்: சிக்கியது ரூ. 35 கோடி!!

இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகர் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா. இவர் கணவர் விஷ்ணு பிரசாத்துடன் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விஷ்ணு பிரசாத், அவரது தந்தை தொழில் அதிபர் சிவபிரசாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனையிட்டனர்.
நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை, மைலாப்பூர் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் 35 பெட்டிகளில் பணம் சிக்கியது. ஒவ்வொரு பெட்டியிலும் ரூ.1 கோடி வரை இருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றதில் வருமான வரித்துறையினர் 35 பெட்டிகளை எடுத்துச் சென்றனர். இதில் கணக்கில் வராத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டு கட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 கோடி. கையகப்படுத்திய ரூ.35 கோடி பணம் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
ஆளுங்கட்சி எம்பியான சிரஞ்சீவியின் மகள் - மருமகன் வீடுகளில் நடந்துள்ள இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications