மக்களவையில் கறுப்புப் பணம் குறித்த 97 பக்க வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் கறுப்புப் பணம் தொடர்பான 97 பக்க வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.
கறுப்புப் பண வெள்ளை அறிக்கை
கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தவையும் நியமிக்கலாம், கறுப்புப் பணக்காரர்களை விசாரித்து தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவலாம், கிரெடிட் - டெபிட் கார்டுகள் மூலம் பொருள்களை வாங்குவதை ஊக்குவிக்கலாம் என்பது உள்பட பல யோசனைகளை வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இதுவரை கறுப்புப் பணம் வைத்திருந்ததாக பிடிபட்டவர்கள் பற்றிய தகவல்களையோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குவிந்திருப்பதாகக் கருதப்படும் கறுப்புப்பணத்தின் அளவு எவ்வளவு என்பதையோ தெரிவிக்கவில்லை.
5 மசோதாக்கள்
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 5 மசோதாக்களை கொண்டுவரலாம் என்கிறது பிரணாப் முகர்ஜியின் வெள்ளை அறிக்கை.
லோக்பால் மசோதா, நீதித்துறையில் பொறுப்பேற்பைக் கொண்டுவரும் மசோதா, ஊழல்களை அரசின் கவனத்துக்கு ரகசியமாகக் கொண்டுவருவோரை ஊக்குவித்து காப்பாற்றும் மசோதா, குறைதீர்ப்பு மசோதா, அரசுக்குத் தேவைப்படுவனவற்றை உரிய சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பகிரங்கமாகக் கொள்முதல் செய்யும் மசோதா ஆகியவைதான் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மசோதாக்களாகும்.
4 அம்ச உத்தி
கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 4 அம்ச உத்திகளையும் பிரணாப்பின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.
வரிச்சட்டங்களைத் தாங்களாகவே நேர்மையாகக் கடைப்பிடிப்போருக்கு ஊக்குவிப்பு தரலாம், பொருளாதாரத்தின் முக்கியமான சில துறைகளில் சீர்திருத்தம் செய்யலாம், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்குக் கடுமையாக தண்டனை விதிப்பதன் மூலம் மற்றவர்களை எச்சரித்து வரி செலுத்த வைக்கலாம், ரியல் எஸ்டேட் என்று அழைக்கப்படும் வீடு, மனை, அடுக்ககம் ஆகியவற்றை விற்பனை செய்யும் துறையில் காணப்படும் ஒழுங்கற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்தி உண்மையான மதிப்புக்குப் பத்திரம் பதிவு செய்வதையும் அதற்கேற்ப வருமானத்தை நேர்மையாக அறிவித்து வரி செலுத்துவதையும் நடைமுறையாக்கிவிடலாம் என்பதுதான் அந்த 4 அம்ச உத்திகள்.
மேலும் நிதித்துறையிலும் ரியல் எஸ்டேட் துறையிலும் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளால் வரி ஏய்ப்பு செய்யும் எண்ணத்தையே மக்கள் கைவிடும்படி செய்யலாம், ரியல் எஸ்டேட் துறையில் தேசிய அளவில் தகவல்களை அரசே திரட்ட வேண்டும். மனை, வீடு, அடுக்ககம் ஆகியவற்றை விற்கும்போதே வரியைக் கழித்துக் கொள்வது (டி.டி.எஸ்.) நடைமுறையாக இருக்கவேண்டும் என்றும் பிரணாப்பின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications