மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தண்டனையா?

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட, மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் - அவர் மக்களவை உறுப்பினரோ, மாநிலங்களவை உறுப்பினரோ - ஒருவரின் ஓட்டு மதிப்பு 708. ஆக, 776 பேரின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,408.
சரி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மதிப்பு எவ்வளவு? மொத்தம் 5,49,474. ஆனால், ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மதிப்பு நீங்கள் இருக்கும் மாநிலத்தைப் பொறுத்தது; உத்தரப்பிரதேசமாக இருந்தால், 208; தமிழகமாக இருந்தால், 176; சிக்கிமாக இருந்தால், 7. அதாவது, சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 29 பேர் ஓட்டை ஓர் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் ஓட்டு தோற்கடித்து விடும்!
ஏன் இப்படி? 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அந்தந்த மாநில மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு இது.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயம் உதைக்க வேண்டும். அப்படி என்றால், குறைந்த அளவிலான மக்கள் தொகையைப் பெற்றிருப்பது ஒரு மாநிலத்தின் சாபமா? மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது ஒரு மாநிலத்துக்குக் கிடைக்கும் தண்டனையா?
ஏனென்றால், தேசிய அரசியலில் உத்தரப்பிரதேச அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துவதும், அருணாசலப்பிரதேச அரசியல்வாதிகளுக்கு அடையாளமே இல்லாமல் இருப்பதும் இந்தப் பின்னணியில்தான். அடுத்த மறு வரையறையின்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவ மதிப்புகூட இறங்கலாம். மக்கள்தொகை குறைந்த மாநிலங்கள் எப்படி எல்லாம் அழுத்தப் படுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது.
இன்னொரு கேலிக்கூத்தும் இதில் உண்டு. மாநிலங்களவைக்கு நியமிக்கப்படும் 12 உறுப்பினர்கள், மக்களவைக்கு நியமிக்கப்படும் 2 ஆங்கிலோ - இந்திய உறுப்பினர்களுக்கு இந்தத் தேர்தலில் ஓட்டு கிடையாது. அதாவது, சச்சினைக் கௌரவப்படுத்த நாம் அவருக்கு உறுப்பினர் உதவி அளிப்போம். ஆனால், அவருக்கு ஓட்டு கொடுக்க மாட்டோம். என்னே கௌரவம்?!
குடியரசுத் தலைவர் அதிகாரமற்றவராக இருக்கலாம். எனினும், அவரைத் தேர்ந்தெடுப்பது தேசிய விவகாரம். நாம் வளர்ச்சிப் பணிகள் போன்ற விஷயங்களை மக்கள்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கலாம். ஆனால், தேசிய அளவிலான முடிவுகளில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும்.
அதேபோல, ஒரு துறை சார்ந்த சாதனைக்காகக் கௌரவிக்கப்படும் நியமன உறுப்பினர்களுக்கு, தேச நலன் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும். இந்திய நாடாளுமன்றம் தன்னுடைய 60 ஆண்டு வரலாற்றைக் கொண்டாடும் இந்தத் தருணத்திலேனும், நம்முடைய ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பதுபற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
நன்றி: விகடன்
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications