அவ்ளோதான், காங். கூட்டணி ஆட்சி கவுரப் போகுது... பீதியைக் கிளப்பும் பாஜக

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என்று புது பீதியைக் கிளப்பியுள்ளது பாஜக.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 2 ஆண்டுகள் பாக்கியுள்ளன. இதையொட்டி சிறப்பு விருந்துக்கு இன்று பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இதில் திமுக தலைவர் கருணாநிதியும், திரினமூ்ல் காங்கிரஸ் தலைவர் மமதாவும் கலந்து கொள்ளவில்லை.

மற்றதையெல்லாம் விட்டு விட்ட பாஜக இதை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு குட்டியான பீதியைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹூசேன் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 3 ஆண்டு காலத்தை கறுப்பு எழுத்துக்களால் எழுத வேண்டும்.

கூட்டணிக் கட்சிகள் திருப்தியாக இல்லை. ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிடக் கூட கூட்டணித் தலைவர்கள் விரும்பவில்லை. இதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் என்று பீடிகையுடன் கூறியுள்ளார். மேலும் கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்றும் அவர் சொல்லியுள்ளார்.

ரொம்பத்தாய்யா கிளப்புறாங்க பீதியை...!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP spokesperson Shanavas Hussain has said that the UPA govt will fall soon. " Leaders like Karunanidhi and Mamata Banerjee are not attending the dinner hosted by the PM. The leaders are not ready to sit with Congress leaders. The alliance is shattered, he added.
Please Wait while comments are loading...